ETI நிறுவன பணிப்பாளர்களுக்கு வௌிநாடு செல்லத் தடை

ETI நிறுவன பணிப்பாளர்கள் நால்வருக்கு வௌிநாடு செல்லத் தடை

by Staff Writer 06-07-2018 | 10:03 PM
Colombo (News 1st)  ETI நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரின் வௌிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். அதற்கமைய, ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க ஆகிய பணிப்பாளர்கள் 4 பேரை எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வௌிநாட்டுப் பயணத்தடை தொடர்பில் உடனடியாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சட்ட மா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியைத் தவிர்ந்த ஏனைய நிதி நிறுவனங்களின் பணிப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ETI நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் நிதி சட்டங்களுக்கு முரணான வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக நிதி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.