டி-ஷர்ட்டைக் கேட்டவருக்கு இன்ப அதிர்ச்சி 

டி-ஷர்ட்டைக் கேட்ட ரசிகரைக் கண்டுபிடித்து பரிசளித்த பெல்ஜியம் கோல் கீப்பர்

by Bella Dalima 06-07-2018 | 8:46 PM
உங்களது டி-ஷர்ட்டைக் கொடுப்பீர்களா என கேட்ட ரசிகரைக் கண்டுபிடித்து, அதனை அவருக்கு வழங்கி, இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பெல்ஜியம் கோல் கீப்பர் மிக்னோலெட். உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நாக்அவுட் சுற்றுப்போட்டி ஒன்றில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் மோதின. முதலில் 2-0 என ஜப்பான் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெல்ஜியம் 3-2 என வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் லிவர்பூல் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு போட்டியை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது தனது கையில் ஒரு பதாகை வைத்திருந்தார். அதில் "Mignolet Can I have U'r T-Shirt?'' என்று எழுதி வைத்திருந்தார். இந்த பதாகை பெல்ஜியம் அணியின் மாற்று கோல்கீப்பரான சைமன் மிக்னோலெட் கண்ணில்பட்டது. உடனடியாக, மிக்னோலெட் அந்த ரசிகருக்கு டி-‌ஷர்ட்டை வழங்க முடிவு செய்தார். அவர் யார் என்று தெரியாததால், அவரைக் கண்டுபிடித்துத் தர முடியுமா என ட்விட்டரில் கோரிக்கை முன்வைத்தார். பின்னர் அந்த ரசிகரைக் கண்டுபிடித்து விட்டோம். அவர் கிர்கிஸ்தானில் இருந்து ரஷ்யா வந்துள்ளார். அவருக்கு என்னுடைய டி-ஷர்ட்டை வழங்கினேன். சமூக வலைத்தளத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். அனைவருக்கும் நன்றி, என்று தெரிவித்துள்ளார் மிக்னோலெட்.