ஜனாதிபதிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்

by Staff Writer 06-07-2018 | 4:45 PM
 Colombo (News 1st)  சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான உதய ஆர். செனவிரத்ன, ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தமது கடமைகளைப் பொறுப்பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஒஸ்டின் பெர்னாண்டோ நேற்று (05) இராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி செயலாளருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.