நவாஸ் ஷெரீப்பிற்கும் மகளுக்கும் சிறைத்தண்டனை

அவன்ஃபீல்ட் வழக்கில் நவாஸ் ஷெரீப்பிற்கும் மகளுக்கும் சிறைத்தண்டனை

by Bella Dalima 06-07-2018 | 5:38 PM
லண்டனில் அவன்ஃபீல்ட் அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகளும் மகள் மர்யம் நவாஸூக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பனாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு, பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப் தற்போது அவ்வழக்கில் மேன்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஊழல் செய்த பணத்தில் லண்டனில் அவன்ஃபீல்ட் என்ற பெயரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸூக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் நவாஸ் ஆகியோர் லண்டனில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.