யுத்தத்தின்பின் மீட்ட தங்கம் குறித்து சந்தேகம்

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கம் குறித்து சந்தேகம் நிலவுவதாக பொன்சேகா தெரிவிப்பு

by Staff Writer 05-07-2018 | 8:34 PM
Colombo (News 1st) யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவ்வேளையில் இராணுவத் தளபதியாக இருந்த நீங்கள் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தீர்கள். யுத்தம் முடிந்ததன் பின்னர், அலரி மாளிகைக்கு கொள்கலனில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் தங்கம் மற்றும் பணத்திற்கு என்ன நடந்ததது? எனக் கேட்டமைக்கு,
இராணுவத் தளபதிப் பதவியிலிருந்து தான் ஓய்வு பெற்றதன் பின்னர் அது அலரிமாளிகைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த அவர், தான் இருக்கும்போது சுமார் 220 கிலோ தங்கத்தை மீட்டதாகவும் அவற்றை தாம் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப எழுத்துமூல ஆவணங்களுடன் வவுனியா பொலிஸாரிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னராக செயற்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சே மேற்கொண்டிருக்க வேண்டும். அதற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கூற முடியாமல் தற்போது ஊமை போன்றிருப்பதாகவும் அது குறித்து தனக்கும் தற்போது சந்தேகமாகவே இருப்பதாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
220 கிலோகிராம் தங்கம் என்பது 27,500 பவுன் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.