யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பலியாகிய கான்ஸ்ரபிளின் மரணத்தில் சந்தேகம்

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பலியாகிய கான்ஸ்ரபிளின் மரணத்தில் சந்தேகம்

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பலியாகிய கான்ஸ்ரபிளின் மரணத்தில் சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2018 | 2:53 pm

Colombo (News 1st) யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்ரபிளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் சேவையில் ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்த 22 வயதான மொஹமட் நஸீர் என்ற கான்ஸ்ரபிள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நியமனம் பெற்று கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மொஹமட் நஸீர் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு பட்டமையினால் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மொஹமட் நஸீரின் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு எந்த காரணமும் இல்லை. நல்ல மனநிலையில் தான் இருந்தார். 6 வேளைத் தொழுகையில் ஈடுபடுபவர். இந்த மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது

என கான்ஸ்ரபிள் நஸீரின் சித்தப்பா மற்றும் சகோதரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்