நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையிடல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப்பிரிவு அறிக்கை

நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையிடல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப்பிரிவு அறிக்கை

நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையிடல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப்பிரிவு அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2018 | 9:09 pm

Colombo (News 1st) நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையிடல் தொடர்பில் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பிரிவு இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்பிய பதில் கடிதம் வௌிப்படுத்தப்படவில்லை என ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய பதில், பத்திரிகைகளில் கண்டும் காணாதாது போன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின தற்போதைய ஜனாதிபதிக்கு நியாயம் கிடைக்காத பத்திரிகையினால் மஹிந்த ராஜபக்ஸவிற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சய்னா ஹாபர் நிறுவனத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் செயற்பாடுகளுக்கு நிதி வழங்கப்பட்டமை தொடர்பில் குறித்த அறிக்கையில்,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சய்னா ஹாபர் நிறுவனத்தினால், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸவின் தேர்தல் பிரசாரத்திற்கு பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் கூற வேண்டிய விடயம் என்னவென்றால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சீன நிறுவனங்களினதும் சேவை நிறுத்தப்பட்டமை அவர்களின் பொறியியலாளர் தகுதி மற்றும் திட்ட அனுபவம் தொடர்பில் ஆராய்வதற்காக அல்ல

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்