தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றம்

தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றம்

தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2018 | 7:22 pm

Colombo (News 1st) தேசிய கணக்காய்வு சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றிருந்தது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவும் ஒன்றாகும்.

இந்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் நிறைவேற்றப்படாதமையால் அதன் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்