இந்தியாவில் 11 பேர் பலியாகிய வீட்டின் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன

இந்தியாவில் 11 பேர் பலியாகிய வீட்டின் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன

இந்தியாவில் 11 பேர் பலியாகிய வீட்டின் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Jul, 2018 | 4:32 pm

இந்தியத் தலைநகர் டில்லியில் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் 11 பேர் மீட்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, சிசிடிவி கபெராவில் பதிவாகியிருந்த காட்சிகள் கிடைத்துள்ளன.

கதிரைகள் மற்றும் வயர்களைக் கையிலெடுத்த குறித்த குடும்ப உறுப்பினர்கள் தூக்கில் தொங்கியுள்ளமை சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தூக்கில் தொங்கியமையாலே குறித்த 11 பேரும் பலியாகியுள்ளதாக பிரேத பரிசோதனைத் தகவலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்ற அதேநேரம், இந்த விடயத்தில் விடையில்லாத பல கேள்விகள் காணப்படுகின்றன.

உயிரிழந்த அனைவரினது கைகளும் பின்பக்கமாகக் கட்டப்பட்டிருந்தன. தமது உயிர்களை மாய்த்துக் கொள்வதற்கு முன்னராக அவர்கள் ஏன் இவ்வாறு செய்துகொண்டார்கள் என்பது தௌிவாகத் தெரியவில்லை.

கடந்த 3 மாத காலமாக சிசிடிவி கமெராவில் பதிவாகிய காட்சிகளை நோக்கினால் அங்கு நடந்த விடயம் தொடர்பில் தௌிவுபெறலாம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் இது சமய ரீதியான செயற்பாடாக இருக்கலாம் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் பலியாகிய நாராயண் தேவியின் இளைய மகனாகிய லலித் பாதியாவினுடையது என நம்பப்படும் 11 டயரிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த டயரிகளில் ஒன்றில் காணப்பட்ட சிறுகுறிப்பின் பிரகாரம், தெய்வாதீனமான குழுவினர் தலையிட்டதுடன், குறித்த குடும்பத்தினரைத் தூக்கில் தொங்குவதற்கு தூண்டியுள்ளமையும் தௌிவாக நம்பப்படுவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்