மிஹின் லங்கா நிறுவன ஆரம்ப உறுப்பினர் சாட்சியம்

மிஹின் லங்கா நிறுவன ஆரம்ப உறுப்பினர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்

by Bella Dalima 04-07-2018 | 9:16 PM
Colombo (News 1st) விமான நிலையத்தின் நடவடிக்கைகளின் போது நடைமுறை ரீதியில் அனுபவிக்க நேரிட்ட கவலைக்கிடமான சம்பவம் தொடர்பில் ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கா கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தெரியவந்தது. மிஹின் லங்கா நிறுவனத்தின் ஆரம்ப உறுப்பினரான Ingrid Guruge இன்று ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். குறைந்த செலவுடனான விமான சேவை என அறிமுகப்படுத்தப்பட்ட மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முகாமையாளர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் ஓய்வு பெற வேண்டிய வயதெல்லையைத் தாண்டி இருந்தவர்கள் என அவர் ஆணைக்குழுவிடம் கூறினார். மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து, ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமே விமானங்களை இயக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 2008 ஆம் ஆண்டில் விமானங்களுக்கான படிக்கட்டுகள், ட்ரொலிகள் மற்றும் ட்ரெக்டர்கள், பொதிகளை விமானங்களுக்குள் கொண்டு செல்வதற்கான கருவிகள் மிஹின் லங்கா நிறுவனத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டன. இந்த கருவிகள் ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்ட நவீன கருவிகள் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக சாட்சியாளர் கூறினார். எனினும், இவை அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை எனவும் ஒரு கருவியை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு நேரிட்டதாகவும் சாட்சியாளர் மேலும் தெரிவித்தார்.