வவுனியா அரசாங்க அதிபர் காலிக்கு இடமாற்றம்

வவுனியா அரசாங்க அதிபர் காலிக்கு இடமாற்றம்

வவுனியா அரசாங்க அதிபர் காலிக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2018 | 3:56 pm

Colombo (News 1st)  வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதானபத்திரன காலி மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்றைய தினம் (03) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

வெற்றிடமாகியுள்ள வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு நிந்தவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய எஸ்.எல்.எம். ஹனீஃபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தை நியூஸ்பெஸ்ட் தொடர்பு கொண்டது.

எவ்வாறாயினும், இந்த நியமனங்கள் தொடர்பில் தமது அலுவலகத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்