புற்றுநோயால் அவதியுறும் காதலர் தினம் நாயகி சோனாலி பிந்த்ரே

புற்றுநோயால் அவதியுறும் காதலர் தினம் நாயகி சோனாலி பிந்த்ரே

புற்றுநோயால் அவதியுறும் காதலர் தினம் நாயகி சோனாலி பிந்த்ரே

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2018 | 5:46 pm

காதலர் தினம் படத்தில் குணால் ஜோடியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே, தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளைச் செய்தேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறவினர்களும் நண்பர்களும் துணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

என சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார்.

43 வயதாகும் சோனாலி பிந்த்ரே தமிழில் `பாம்பே’ படத்தில் அறிமுகமாகி, `காதலர் தினம்’ படத்தில் இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்