உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இரண்டாம் சுற்று நிறைவு: காலிறுதிக்கு 8 நாடுகள் தகுதி

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இரண்டாம் சுற்று நிறைவு: காலிறுதிக்கு 8 நாடுகள் தகுதி

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இரண்டாம் சுற்று நிறைவு: காலிறுதிக்கு 8 நாடுகள் தகுதி

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2018 | 4:53 pm

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இரண்டாம் சுற்று நேற்றுடன் (03) நிறைவடைந்த நிலையில், காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில் 32 நாடுகள் பங்கேற்றதுடன், இரண்டாம் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன.

2 ஆம் சுற்று ஆட்டங்கள் நேற்று நிறைவடைந்ததுடன், இதன் முடிவில் பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரோஷியா, பிரேஸில், பெல்ஜியம், ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் 2 ஆவது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் பிரான்ஸ்- உருகுவே, பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

7 ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து-ஸ்வீடன், ரஷ்யா, குரோஷியா அணிகள் மோதுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11 அம் திகதிகளிலும் இறுதிப்போட்டி 15 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்