அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றோருடன் இணைப்பு

அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றோருடன் இணைப்பு

அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றோருடன் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2018 | 7:28 am

அமெரிக்காவிற்குள் அகதிகளாக வருபவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட பிள்ளைகள் அவர்களது பெற்றோருடன் மீள இணைந்துள்ளனர்.

அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளிடமிருந்து அவர்களின் பிள்ளைகள் பிரிக்கப்பட்டு எல்லையோர காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, தனது கொள்கையிலிருந்து பின்வாங்கிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்க அனுமதிக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்நிலையில், பிரிக்கப்பட்ட பிள்ளைகளுடன் அவர்களது பெற்றோர் சிலர் மீள இணைந்துள்ளனர்.

முன்னதாக ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் மற்றும் ஹொலிவுட் பிரபலங்கள் ஜனாதிபதியின் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேரணிகளும் நடைபெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்