ரயிலில் இன்று முதல் தடை!

ரயிலில் இன்று முதல் தடை!

by Staff Writer 01-07-2018 | 4:26 PM

Colombo (News1st)இன்று முதல் ரயில்கள், மற்றும் ரயில் நிலையங்களில் சட்டவிரோதமாக பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாசகம் கேட்பதற்கும் இன்று முதல் முற்றுமுழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரயில் பாதுகாப்பு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். தடையை மீறி செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.