நடிகர் ரோய் டி சில்வா காலமானார்

நடிகர் ரோய் டி சில்வா காலமானார்

by Staff Writer 01-07-2018 | 7:33 AM
Colombo (News 1st) பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரோய் டி சில்வா தனது 80ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார். ரோய் டி சில்வா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் பிறந்த ரோய் டி சில்வா, நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநராக சினிமாத் துறையில் பாரியளவில் பணியாற்றியுள்ளார்.