ஒரு மாத காலத்தில் பாதாளக் குழுவினர் 18 பேர் கைது

ஒரு மாத காலத்தில் பாதாளக் குழுவினர் 18 பேர் கைது

ஒரு மாத காலத்தில் பாதாளக் குழுவினர் 18 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2018 | 7:14 am

Colombo (News 1st) நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பாதாளக் குழுவைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 8 பேர், ‘அங்குலான அஞ்சு’ எனப்படும் பாதாளக் குழுத்தலைவரின் நண்பர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ள அதேநேரம், ஏனையோர் ‘மாகதுர மதுஷ்’ எனும் நபரின் நண்பர்கள் எனவும் அதிரடிப் படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பாதாளக் குழு உறுப்பினர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.

அதேநேரம், நாட்டின் பிரபல பாதாளக் குழுக்களின் தலைவர்கள் 6 பேர் வௌிநாட்டில் தங்கியுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

‘அங்கொட லொக்கா’, ‘மாதுர மதுஷ்’ ஆகியோர் இந்தியாவிலும் ‘அங்குலான அஞ்சு’ துபாயிலும் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரினூடாக அறிவித்தல் பிறப்பித்துள்ளதாக விசேட அதிரடிப்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்