முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானம்

முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானம்

முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2018 | 8:30 am

Colombo (News 1st) முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் காரணமாக உள்நாட்டு முட்டைகளின் கேள்வி, சந்தையில் குறைவடைவதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், உள்நாட்டில் போதுமானளவு முட்டைகள் காணப்படுவதாகவும் அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா மேலும் குறிப்பிட்டுள்ளார்.