தேசிய கனிஷ்ட சாதனையை புதுப்பித்துள்ள பாரமி வசந்தி மாரிஸ்டெலா

தேசிய கனிஷ்ட சாதனையை புதுப்பித்துள்ள பாரமி வசந்தி மாரிஸ்டெலா

தேசிய கனிஷ்ட சாதனையை புதுப்பித்துள்ள பாரமி வசந்தி மாரிஸ்டெலா

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2018 | 6:25 pm

Colombo (News 1st)  மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் பாரமி வசந்தி மாரிஸ்டெலா தம்வசமிருந்த தேசிய கனிஷ்ட சாதனையை புதுப்பித்துள்ளார்.

பின்லாந்தில் இன்று ஆரம்பமான உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் இந்த இலக்கை எட்டினார்.

போட்டியை 10 நிமிடங்கள், 20.12 செக்கன்ட்களில் கடந்த பாரமி வசந்தி, தேசிய கனிஷ்ட சாதனையுடன் ஐந்தாமிடத்தைப் பிடித்தார்.

எவ்வாறாயினும், உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் அவரால் காலிறுதிக்கு தகுதிபெற முடியவில்லை.

இதேவேளை, உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் டில்ஷி குமாரசிங்க ஏழாமிடத்தை அடைந்தார்.

அதற்காக அவருக்கு 2 நிமிடங்கள், 12. 91 செக்கன்ட்கள் சென்றன.

இதனால் 800 மீட்டர் ஓட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு டில்ஷி குமாரசிங்கவுக்கு கிடைக்கவில்லை.