கிரிக்கெட் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்கவிற்கு போட்டித் தடை

கிரிக்கெட் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்கவிற்கு போட்டித் தடை

கிரிக்கெட் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்கவிற்கு போட்டித் தடை

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2018 | 8:31 am

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் தினேஸ் சந்திமால், தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் 2 டெஸ்ட் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின்போது, கிரிக்கெட் ஒழுக்க விதிகளை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்களின் செயற்பாட்டினால், போட்டியை ஆரம்பிப்பதில் சுமார் 2 மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினேஸ் சந்திமால், சந்திக அத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோரிடம் ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை அவர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளுக்குத் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை விதிப்பு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2 போட்டிகளைக் கொண்ட இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டிகளிலிருந்து அவர்கள் விலக்கப்படவுள்ளனர்.