கன்னடத்தில் வில்லனாக மிரட்டவுள்ள விஜய் சேதுபதி

கன்னடத்தில் வில்லனாக மிரட்டவுள்ள விஜய் சேதுபதி

கன்னடத்தில் வில்லனாக மிரட்டவுள்ள விஜய் சேதுபதி

எழுத்தாளர் Bella Dalima

11 Jul, 2018 | 5:56 pm

பல படங்களைக் கைவசம் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கன்னடப் படத்தில் வில்லனாக மிரட்டவுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜுங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வௌியாகத் தயாராகி வருகிறது. மேலும், இவரது நடிப்பில், ‘சீதக்காதி’, ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

விஜய் சேதுபதி தான் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன்.

அவருக்கு ஒரு வேடம் பிடித்திருந்தால் அது சிறியதாக இருந்தாலோ, வில்லனாக இருந்தாலோ கூட நடித்து விடுவார்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து, கன்னடப் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார்.

சிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.