உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: அரையிறுதியில் இங்கிலாந்தும் க்ரோஷியாவும் பலப்பரீட்சை

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: அரையிறுதியில் இங்கிலாந்தும் க்ரோஷியாவும் பலப்பரீட்சை

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: அரையிறுதியில் இங்கிலாந்தும் க்ரோஷியாவும் பலப்பரீட்சை

எழுத்தாளர் Bella Dalima

11 Jul, 2018 | 10:29 pm

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து மற்றும் க்ரோஷியா அணிகள் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரை நடத்தும் ரஷ்யாவை காலிறுதியில் வீழ்த்தி​யே க்ரோஷியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இது க்ரோஷிய 20 வருடங்களுக்கு பின்னர் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பமாகும்.

இதேவேளை, காலிறுதியில் சுவீடனை தோற்கடித்து இங்கிலாந்து அரையிறுதியை உறுதி செய்தது.

இங்கிலாந்து 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியை கண்டுகளிக்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் மொஸ்கோவில் காத்திருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி இலங்கை நேரப்படி இரவு 11.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.