ஈரானுடனான இலங்கையின் வர்த்தக நடவடிக்கை 80 இலட்சம் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு

ஈரானுடனான இலங்கையின் வர்த்தக நடவடிக்கை 80 இலட்சம் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு

ஈரானுடனான இலங்கையின் வர்த்தக நடவடிக்கை 80 இலட்சம் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2018 | 3:58 pm

Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் வர்த்தக நடவடிக்கைகள் 80 இலட்சம் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கைகளின் பெறுமதி 18 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டொலர்களென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 94 சதவீதம் இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிப் பொருட்களுக்கான பெறுமதி என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.

இதில் 90 சதவீதம் தேயிலை ஏற்றுமதி எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.