தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

by Staff Writer 30-06-2018 | 10:36 AM
Colombo (News 1st) நாட்டிற்கு சட்டவிரோதமாகத் தங்கம் கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் சுங்க பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார். உடலில் மிக சூட்சுமமாக மறைத்துக்கொண்டு வரப்பட்ட 3 தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 22 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை நாட்டிற்கு கொண்டுவந்த உகண்டா பிரஜையொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தினால் சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 858 மாணிக்கக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.