அமெரிக்காவின் தீர்வை வரிகளுக்கு பதிலடி கொடுப்போம்

அமெரிக்காவின் புதிய தீர்வை வரிகளுக்கு பதிலடி கொடுப்போம்: கனடா

by Bella Dalima 30-06-2018 | 5:01 PM
அமெரிக்காவின் புதிய தீர்வை வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா ஒருபோதும் பின்வாங்காது என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அலுமினியம் மற்றும் உருக்கு மீது புதிய தீர்வை வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். 16.6 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஜுலை 1ஆம் திகதி முதல் அமலுக்கு வருகின்றது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று உயர் வர்த்தக நட்பு நாடுகளாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு 700 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பல்வேறு விவகாரங்களால் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளில் தற்போது சிக்கல்கள் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.