பயிர்ச்செய்கைக்காக இலவசமாக காப்புறுதி வழங்கதிட்டம்

சிறுபோகப் பயிர்ச்செய்கையைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு காப்புறுதி உறுதிப்பத்திரங்கள் இலவசம்

by Staff Writer 30-06-2018 | 1:47 PM
Colombo (News 1st) இம்முறை சிறுபோகத்திற்கான பயிர்ச்செய்கைகளைப் பாதுகாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு காப்புறுதி உறுதிப்பத்திரங்களை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான காப்புறுதியை எவ்விதக் கொடுப்பனவும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சோயா, அவரை மற்றும் பச்சைமிளகாய் ஆகிய பயிர்களுக்கு இலவசமாக காப்புறுதி வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா வீதமும், ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பிற்கு 1 இலட்சம் ரூபா வீதமும் காப்புறுதி வழங்கப்படவுள்ளது. இலங்கை விவசாய மற்றும் கமநல சபையின் ஊடாக இந்தக் காப்புறுதிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.