அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பயந்தவர்களாக இருக்கின்றார்கள்: கே.கே. மஸ்தான்

அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பயந்தவர்களாக இருக்கின்றார்கள்: கே.கே. மஸ்தான்

அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பயந்தவர்களாக இருக்கின்றார்கள்: கே.கே. மஸ்தான்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2018 | 9:06 pm

Colombo (News 1st)  அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பயந்தவர்களாக இருப்பதாக வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.கே. மஸ்தான் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் செய்யும் அடாவடித்தனங்களையும் சட்டவிரோதமான செயற்பாடுகளையும் மக்கள் விழிப்புடன் தடுக்கும் போது அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் பயப்படுவார்கள் என பிரதியமைச்சர் கே.கே. மஸ்தான் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கே.கே. மஸ்தானை வரவேற்கும் நிகழ்வு இன்று மன்னாரில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்