மாத்தறை நகைக்கடை கொள்ளை: 3 சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மாத்தறை நகைக்கடை கொள்ளை: 3 சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மாத்தறை நகைக்கடை கொள்ளை: 3 சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2018 | 4:35 pm

Colombo (News 1st)  மாத்தறையில் நகைக்கடையொன்றில் கொள்ளையிடச் சென்று தலைமறைவாகிய மூன்று சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுள் பிரபல பாதாளக்குழு உறுப்பினரான ஹபரகட வசந்தவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஹோமாகம – ஹபகரகடயில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டில் நேற்று (28) இரவு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது துப்பாக்கியும் ரவைகளும் கைப்பற்றப்பட்டன.

மாத்தறையில் நகைக்கடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், குறித்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரின் மனைவியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்