நியூ​யோர்க் டைம்ஸ் வௌிக்கொணர்ந்த விடயங்களை விசாரிக்குமாறு முறைப்பாடு

நியூ​யோர்க் டைம்ஸ் வௌிக்கொணர்ந்த விடயங்களை விசாரிக்குமாறு முறைப்பாடு

நியூ​யோர்க் டைம்ஸ் வௌிக்கொணர்ந்த விடயங்களை விசாரிக்குமாறு முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2018 | 10:10 pm

Colombo (News 1st)  நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி இணையத்தள ஊடகவியலாளர்களின் தேசிய அமைப்பு பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

அந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறும் நாட்டிற்கு உண்மையை வெளிப்படுத்துமாறும் பொலிஸ் நிதிக்குற்ற பிரிவினரிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவ்வமைப்பின் தலைவர் சதுரங்க அல்விஸ் குறிப்பிட்டார்.

”மஹிந்த ராஜபக்ஸ திருடன் என கூறுவீர்கள் எனின் ராஜபக்ஸக்களுடன் அரசாங்கத்திற்கு ஒப்பந்தம் இல்லை எனின், அவ்வாறான ஒப்பந்தமொன்று இல்லை என நாட்டிற்கு வெளிக்காட்ட சிறந்த சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது,” என சதுரங்க அல்விஸ் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களை காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்