நடிகர்களுக்கான ஊதியத்தை வரையறுத்துள்ள சீனா

நடிகர்களுக்கான ஊதியத்தை வரையறுத்துள்ள சீனா

நடிகர்களுக்கான ஊதியத்தை வரையறுத்துள்ள சீனா

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2018 | 8:06 pm

Colombo (News 1st)  சீனாவின் திரைத்துறையில் காணப்படும் வரி ஏய்ப்பையும், பணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மனப்பான்மையையும் தடுக்கும் விதமாக நடிகர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை வரையறுத்துள்ளதாக சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சீன திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடிக்கின்ற நடிகர்கள், அந்நிகழ்ச்சியின் மொத்த தயாரிப்பு செலவில் 40 சதவீதத்தை தங்களுடைய ஊதியமாகப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், முன்னிலை நடிகர்களுக்கு மொத்த ஊதிய தொகையில் 70 சதவீதத்திற்கு மேலாக வழங்கப்படக்கூடாது என்றும் சீன அரசு கூறியுள்ளது.

திரைத்துறையில் பிரபல நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்