ஜூலையில் மரக்கறி விலை குறைவடையக்கூடும்

ஜூலையில் மரக்கறி விலை குறைவடையக்கூடும்

ஜூலையில் மரக்கறி விலை குறைவடையக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2018 | 4:46 pm

Colombo (News 1st)  அடுத்த மாதத்தின் (ஜூலை) இறுதி வாரமளவில் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடையக்கூடும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தைகளில் தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W. வீரகோன் குறிப்பிட்டார்.

மார்ச் மாதத்தில் நிலவிய வறட்சியால் விவசாயிகள், செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடாததால், போதுமானளவு மரக்கறிகள் சந்தைகளுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மரக்கறி வகைகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்