அமெரிக்காவின் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் கொலை, மூவர் காயம்

அமெரிக்காவின் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் கொலை, மூவர் காயம்

அமெரிக்காவின் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் கொலை, மூவர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2018 | 3:21 pm

அமெரிக்காவின் மேரிலன்ட் பகுதியிலுள்ள பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரி ஒருவரால் செய்தி அறையின் கண்ணாடியிலான கதவு வழியாக, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அடையாளங்காண்பதை தவிர்ப்பதற்காக தனது விரல்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான குறித்த சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்