புல்லுமலையில் நிர்மாணிக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

புல்லுமலையில் நிர்மாணிக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

புல்லுமலையில் நிர்மாணிக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2018 | 10:25 pm

Colombo (News 1st)  செங்கலடி – புல்லுமலை பகுதியில் நிர்மாணிக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஏறாவூர்பற்று பிரதேச சபை உப தலைவரிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏறாவூர் பிரதான வீதியூடாக பேரணியாக சென்று ஏறாவூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்தனர்.

செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்படும் தண்ணீர் தொழிற்சாலை மற்றும் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளரிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

செங்கலடி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்