சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Staff Writer 28-06-2018 | 12:56 PM
Colombo (News 1st) யாழ். சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் சிறுமி ரெஜினா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, சிறுமி ரெஜினாவிற்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் பேரணியை ஆரம்பித்தவர்கள் சேர் பொன். இராமநாதன் வீதியினூடாக சென்று, யாழ். பலாலி பிரதான வீதியை மறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, சிறுமி ரெஜினாவைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவத்திற்கு உடனடியாக நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.