by Staff Writer 28-06-2018 | 3:55 PM
Colombo (News 1st) மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அண்மையில் நிலவிய மழையுடன் கூடிய வானிலையால் அறுவடை குறைவடைந்தமையே இதற்குக் காரணமாகும்.
நூற்றுக்கு இரண்டு மடங்கினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.
இதன் காரணமாக நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மரக்கறிகளை களஞ்சியப்படுத்தக்கூடிய குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் இன்மையும், மரக்கறிகளின் விலை அதிகரிப்பிற்கு காரணம் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் சுட்டிக்காட்டியது.
எனவே, விவசாயிகளும் நுகர்வோரும் எதிர்நோக்கும் சிக்கலை தவிர்க்கும் வகையில், நாடளாவிய ரீதியில் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.