வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2018 | 8:57 am

Colombo (News 1st) வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி ஒரு மாதத்தில் 700 விண்ணப்பதாரிகள் விண்ணப்பிப்பதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 2017 ஆம் ஆண்டில் 12,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி வருகின்ற விண்ணப்பங்கள் விசேட குழுவினூடாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்