ஜூலையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

ஜூலையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

ஜூலையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2018 | 4:46 pm

பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸூம் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா சோப்ரா ஹொலிவுட் படங்கள், ஹொலிவுட் தொடர்களில் நடித்து வரும் நிலையில், அவருக்கும் நிக் ஜோனஸூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடந்த நிக் ஜோனஸ் குடும்ப திருமண நிகழ்ச்சியிலும் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
அப்போது உறவினர்களிடம் பிரியங்கா சோப்ராவை அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தற்போது இருவரும் மும்பை வந்துள்ளார்கள். தனது குடும்பத்தினரிடம் நிக் ஜோனஸை பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர்களுக்கு நிக் ஜோனஸை பிடித்து விட்டதாகவும், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணத்தை ஜூலையில் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்