நைரோபியில் உள்ள காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு

நைரோபியில் உள்ள காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு

நைரோபியில் உள்ள காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2018 | 4:29 pm

கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

சந்தையின் உட்பகுதியில் பற்றிய தீ, படிப்படியாக அக்கம்பக்கம் இருந்த கட்டடங்களுக்கும் பரவியுள்ளது.

தீயில் சிக்கிய 15 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகியுள்ளதுடன், 70-க்கும் மேற்பட்டோர் தீக்காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் சிக்கிய கட்டடங்கள் சிதைவுற்று பலவீனமாக இருப்பதால், தீயில் பலியானோரின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்