ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2018 | 11:15 am

Colombo (News 1st) பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரே‌ஷ்ட அதிகாரிகள் 5 பேர், விசேட வைத்திய நிபுணர்கள் 5 பேர் மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 1, 2 மற்றும் 3 ஐ சேர்ந்த மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் இந்தக் குழு விசேட ஆய்வினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றவிதத்தில் பரீட்சை நடைமுறையை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்