மென்செஸ்டர் தீ: 30 குடும்பங்கள் வௌியேற்றம்

மென்செஸ்டரில் பரவிய தீயினால் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வௌியேற்றம்

by Staff Writer 27-06-2018 | 1:22 PM
பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் பாரிய தீ பரவியதையடுத்து, 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த தீ, நிலவும் வெப்பமான காலநிலையையடுத்து, இன்றும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. தீ காரணமான அருகில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். மேலும் , அங்கு நிலவும் வெப்பநிலையான வானிலை காரணமாக தீயணைப்பதில் சிக்கல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீ விபத்து காரணமாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டன. பிரித்தானியாவின் ஸ்டேலிபிரிட்ஜ் நகருக்கருகே உள்ள கார்புரோக் பகுதியிலிருந்து 34 குடும்பங்கள் வௌியேற்றப்பட்டன. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் வௌியாகவில்லை. இதனிடையே தீச்சுவாலைகள், அருகிலிருக்கும் பகுதிகளுக்கு பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.