முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்டம்

மானி பொருத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்டம்: நடைமுறைப்படுத்துவதற்கான குழு நியமனம்

by Staff Writer 27-06-2018 | 1:42 PM
Colombo (News 1st) மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், இதற்கான குழு அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக வீதி பாதுகாப்பு தொடர்பான ​தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் முச்சக்கரவண்டி பயணக்கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. எனினும், பல முச்சக்கரவண்டிகளில் மானி பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கிராமப்புரங்களில் எந்த முச்சக்கரவண்டிகளிலும் மானி பொருத்தப்படவில்லையென போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் மானி பொருத்தும் அரசின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த குழுவினூடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.