அமெரிக்க மாநிலங்களில் ட்ரம்புக்கு எதிராக வழக்கு

புகலிடம் கோருவோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது தொடர்பில் அமெரிக்காவின் 17 மாநிலங்களில் ட்ரம்புக்கு எதிராக வழக்கு

by Staff Writer 27-06-2018 | 11:23 AM
அமெரிக்க எல்லைப் பகுதியில் புகலிடக்கோரிக்கையாளர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரிப்பது 'சட்டவிரோதமானது' எனக்கூறி அமெரிக்காவின் 17 மாநிலங்களில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு  எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிள்ளைகளுடன் அமெரிக்காவிற்குள் வருபவர்களைக் கைதுசெய்து குடியுரிமை சட்டத்தை மீறியதாகத் தெரிவித்து பிள்ளைகள் மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்தியேக காப்பகங்களில் தடுத்துவைக்கப்படுகின்ற சூழல் அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 31 ஆம் திகதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் 1,940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த சிறுவர், சிறுமியர்கள் 2,300 பேர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறும் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவர்களின் பிள்ளைகளை சேர்த்துவைப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் ட்ரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டிருந்தார். இந்தநிலையில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது தொடர்பில் அமெரிக்காவின் 17 மாநிலங்களில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.   https://www.youtube.com/watch?v=UQ-M3r-Le7Y