பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அறிவிப்பை மீறி தொடர்ந்தும் முள்ளுத்தேங்காய் பயிர்செய்கை

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அறிவிப்பை மீறி தொடர்ந்தும் முள்ளுத்தேங்காய் பயிர்செய்கை

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அறிவிப்பை மீறி தொடர்ந்தும் முள்ளுத்தேங்காய் பயிர்செய்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Jun, 2018 | 7:50 pm

Colombo (News 1st)  முள்ளுத்தேங்காய் செய்கையை நிறுத்துமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென மக்கள் குற்றஞ்சாட்டினர்.

முள்ளுத்தேங்காய் செய்கை சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து, அதனை நிறுத்துமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் கடந்த ஏப்ரல் மாதம் பணிப்புரை விடுக்கப்பட்டது.

எனினும், கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்தும் முள்ளுத்தேங்காய் செய்கை இடம்பெற்று வருகிறது.

கேகாலையில் மேற்கொள்ளப்படும் முள்ளுத்தேங்காய் செய்கைக்கு எதிராக பல அமைப்புகள் தமது கண்டனத்தை தொடர்ந்தும் வௌியிட்டு வருகின்றன.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ள 156 பக்க அறிகையில் முள்ளுத்தேங்காய் உற்பத்தி நாட்டிற்கு உகந்தது அல்லவென தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் கோசல நுவன் ஜயவீர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்