வெனிசூலா உப ஜனாதிபதி மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை

வெனிசூலா உப ஜனாதிபதி மீது தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

by Staff Writer 26-06-2018 | 10:54 AM
வெனிசூலாவின் உப ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடைபெறவில்லை என தெரிவித்தே ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், உப ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகியூஸ் (Delcy Rodríguez) மற்றும் 11 அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படவுள்ளன. நடந்துமுடிந்த ஜனாதபதித் தேர்தலில் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இந்தத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.