13,000 பேரை பாலைவனத்தில் தவிக்கவிட்ட அல்ஜீரியா

13,000 பேரை பாலைவனத்தில் தவிக்கவிட்ட அல்ஜீரியா: ஐ.நா சபை கண்டனம்

by Bella Dalima 26-06-2018 | 4:45 PM
Colombo (News 1st)  13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளை பாலைவனத்தில் தவிக்கவிட்ட அல்ஜீரிய அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நைஜீரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அல்ஜீரியாவிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்களில் கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட 13 ஆயிரம் பேரை சஹாரா பாலைவனத்திற்கு அந்நாடு விரட்டிவிட்டுள்ளது. கொடூர வெயிலில் குடியிருப்பு, தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அகதிகளாக வந்தவர்களை பாலைவனத்திற்கு விரட்டிவிட்ட அல்ஜீரிய அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.