ஐ.கே. மகானாமவின் பிணை மனு நிராகரிப்பு

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானியின் பிணை மனு நிராகரிப்பு

by Staff Writer 26-06-2018 | 1:10 PM
Colombo (News 1st) இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் செயலணித் தலைவர் கலாநிதி ஐ.கே. மகானாம மற்றும் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகியோரின் பிணை மனுவை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்ட இலஞ்சத் தொகையை கருத்திற்கொண்டு இந்த வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு மன்று தீர்மானித்துள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார். குரல் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தேகநபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் இன்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.