அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு வௌியானது

அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு வௌியானது

by Bella Dalima 26-06-2018 | 5:09 PM
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடித்து வருவதுடன், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் தூதுவராக உள்ளார். இந்நிலையில், அனுஷ்கா சர்மாவின் சொத்து விபரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அனுஷ்கா, விளம்பரங்கள் மூலமும் சம்பாதிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க 9 கோடி இந்திய ரூபா சம்பளம் வாங்குகிறார். இது தென்னிந்திய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். விளம்பரப்படத்தில் நடிக்க 4 கோடி ரூபா வாங்குகிறார். மும்பையில் அனுஷ்கா சர்மா வசிக்கும் வீட்டின் மதிப்பு 9 கோடி ரூபா. இந்த வீடு 2014இல் 6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. அனுஷ்கா சர்மாவின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 220 கோடி இந்திய ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.