ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

by Staff Writer 25-06-2018 | 9:31 AM
Colombo (News 1st) கொழும்பு - இரத்மலானை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு, தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டது என பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்துள்ளார். இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். ல்கிஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்மலானை ச்சனிந்தாராம வீதியில் இன்று காலை 7.20 அளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்தார். லெப்டினன் கமாண்டர் W.D.C பெரேராசின் சாரதியாக கடமையாற்றிய கோப்ரல் அமல் யஸிஸ் பிரபாத் என்பவரே காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டில் கோப்ரலின் கையில் காயமேற்பட்டுள்ளதுடன் சிகிச்சைகளுக்காக அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.