by Staff Writer 25-06-2018 | 11:00 AM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் முகாமைத்துவ பீடத்தின் 4 ஆம் வருட மாணவர்கள் நால்வருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.