நைஜீரிய மோதலில் 86 பேர் பலி

நைஜீரியாவில் விவசாயிகள் - இடையர்கள் இடையேயான மோதலில் 86 ​பேர் பலி

by Chandrasekaram Chandravadani 25-06-2018 | 12:09 PM
நைஜீரியாவில் விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக பிளேடியூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை, புலானி இடையர்களின் மீது பெரோம் விவசாயிகள் மீது தாக்கியபோதே அவர்களுக்கு இடையே மோதல் ஆரம்பித்ததாக சில தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடையாக நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் சம்பவங்களின் பின்னர் மாநிலத்தின் மூன்று பகுதிகளில் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மோதல்களில் 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதோடு 15 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 2 வாகனங்களும் எரிந்துள்ளதாக மாநிலத்தின் பொலிஸ் ஆணையாளர் அண்டி அடீ (Undie Adie) தெரிவித்துள்ளார். ரியோம், பரிகின்லேடி, ஜோஸ் ஆகிய பகுதிகளில் உள்நாட்டு நேரப்படி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ஊடரங்கு அமுல்படுத்தப்படும் என பிளேடியூ அரசாங்கம் தெரிவித்துள்ளது.